நீண்ட நெடும் பயணம்
குகையின் முடிவில் வெளிச்சம் தான்
நீண்ட நெடும் பயணம் முடிவுக்கு வந்தது .
வெளிச்சத்தை நோக்கி ஓடி ஓடி -
தொண்ணுறு ஆண்டுகள் ஓடிவிட்டன ,
குகையின் இருட்டில்
எப்போதோ விரிசல்களில்
கசியும் ஒளி ரேகைகளின்
பலத்தில் வாழ்க்கை வண்டியை
இழுத்து முடித்தாகிவிட்டது .
ஒளிபூக்களை மக்களுக்கு
வழங்கி விட்டு ,
இருளில் ஊர்ந்து -
வெளிச்சத்தை நோக்கிநகர்ந்து
குகை வாசலில் இனிநகர
கால்கள் இன்றி
மேல்நோக்கி பறந்தது ஆத்மா .
Comments
Post a Comment