வசுகுட்டிக்கு தெரியாது

ஊழல் பிசாசுகளை 
ஒருசேர சாடிவிட்டு 
லஞ்ச லாவணிகளை
நாக்கை பிடுங்க 
கேள்வி கேட்டுவிட்டு 
வீடு வந்த இளம் பேச்சாளர் -
பள்ளிக்கூடம் போகமாட்டேன் 
என்று பிடிவாதம் பிடித்த 
மகளிடம் சொன்னார் -
"நீ சமத்தா பள்ளிக்கூடம் போனால் 
அப்பா உனக்கு பைவ் ஸ்டார் தருவேன் ".
பைவ் ஸ்டாரை  சுவைத்தபடி 
பள்ளிக்கூடம் போன வசுகுட்டிக்கு 
அப்பா மேடையில் பேசும் பேச்சுக்கள் 
எதுவும் தெரியாது  பாவம் .

   

Comments

Popular Posts