எந்த மொழி நம் மொழி ?
நீங்கள் வீட்டில் பேசும் மொழி என்ன?
என் வேர்களை கணிக்க முடியாத
அம்புஜம் என்னிடம் மெல்லவே வினவினர் .
தமிழும், ஆங்கிலமும் ,ஹிந்தியும் ,மலையாளமும்
அவியலாக எங்கள் நாவில் நடமாட
என் இல்லத்தில் எந்தநேரமும் நிறைந்திருக்கும்
உன்னத மொழி ஒன்று உண்டு
அதன் பேர் மௌனம் .
என் மௌனம் உனக்கும்
உன் மௌனம் எனக்கும் என்றுமே அத்துப்படி .
உன் செல்ல மௌனம் ,கோப மௌனம்
இயலாமை மௌனம்,நேச மௌனம்
எரிச்சல் மௌனம் ,பசி மௌனம்
எதுவுமே எனக்கு புரியாமல்
என்னை கடந்து போவதில்லை ,
என் மௌனங்களும் உன்
விரல் நுனியில் நடனமாடுகிறது .
மௌனத்தை வாழ்வியலாகவே
நேசிக்கும் நமக்கு
வார்த்தைகளும் மொழிகளும்
சிலநேரம் அன்னியப்பட்டு போகிறது .
இதனால் தானோ ஓயாமல் பேசும்
அம்புஜத்தை கண்டால்
நீயும் நானும் ஓடி ஒளிகிறோம் !!!
Comments
Post a Comment