கண் தானம்

குட்டி கிராமம் ஒன்றில் 
நேற்று காலமான என் சித்தி 
கண் தானம் செய்துள்ளார் .

பென்னாகரம் பெரியப்பாவும்
சிங்கநல்லூர்  சித்தப்பாவும் 
அமெரிக்கா வாழ் அர்ஜுனும் 
நாளை மரணத்தை வரவேற்க 
காத்திருக்கும் சுந்தரி பாட்டியும் 
கண்தானம் செய்ய தயார் ஆகி விட்டார்கள் 

எங்கள் குடும்பத்தில் கண்தானம் பற்றிய
விழிப்புணர்வு அதிகம் .

ஆறு வருடங்களுக்கு முன்பு 
எங்கள் செல்லக்குட்டி மணி 
கண்பார்வை இன்றி பிறக்கும்வரை 
நாங்கள் கண்களை பத்தி நினைத்து 
பார்த்தது கூட இல்லை. .

                                                                             


                                                                                                                                                                                      

Comments

Popular Posts