மீண்டும் ஒரு இடி
மீண்டும் ஒரு இடி இன்று நெஞ்சில் இறங்கியது
தாகூரின் சுதந்திர கவிதைகளை நேசித்து வளர்ந்த அவளால்
இன்று தன் குட்டி தேவதையை காணும்போதல்லாம் ,
பயத்தை மட்டுமே உணர முடிகிறது .
மனம் விட்டு சிரித்து அந்த சிரிப்பை மகளுடன் பகிர ஆசை
பயமெனும் இருட்டால் நிரம்பிய நெஞ்சில் இருந்து
சிறு புன்னகை கூட வருவதில்லை .
போன தலைமுறை அம்மாக்கள் புண்ணியம் செய்தவர்களோ ?
எங்கெங்கு நோக்கினும் இன்று அரக்கர்களே நிரம்பி வழிவது ஏன் ?
கலைமகளாய் ,அலைமகளாய் ,திருமகளாய் தன் மகளை காண அவளுக்கும் ஆசை !
சுதந்திர நாட்டில் அன்றோ இவளை பெற்றேன் ?
இவளை சுதந்திரமாக எப்படி வளர்க்க போகிறேன் ?
நாட்டின் தலை நகரில் நேற்றும் ஒரு பெண் சின்னாபின்னமாக்கப்பட்டாள்
இறைவா என் குட்டி தேவதையை சிரிப்புடன் சுதந்திரமாக வளர்க்க ஒரு வழி சொல் நீயே !
Comments
Post a Comment